திருவாரூரில் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் : பாடுபட்டு விளைவித்த நெல்லை விற்கமுடியாமல் விவசாயிகள் வேதனை

Jan 23 2022 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூரில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு காரணமாக பாடுபட்டு விளைவித்த நெல்லை விற்கமுடியாமல் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், நெல் கொள்முதலில் பெரும் குளறுபடிகள் நடைபெறுவதால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்படாததாலும், கொள்முதல் நடைமுறைகள் அடிக்‍கடி மாற்றப்படுவதாலும் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. நெல் மூட்டைகள் கடும் பனியால் ஈரப்பதமாகி விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மன்னார்குடி, கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்றுவரும் போதிலும் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என விவசாயிகள் கூறினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00