மதுபாட்டில்களை திருடிச் சென்று தண்ணீர் கலந்து விற்ற கும்பல் : 4 பேர் கைது - போலீசார் தீவிர விசாரணை

Jan 23 2022 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுபான கடைகளுக்கு எடுத்துச் செல்லும் மதுபாட்டில்களின் மூடியை கழற்றி தண்ணீரை கலந்துவிட்டு மதுபானங்களை திருடி விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தேவையான அனைத்துவித மது வகைகளும் மணலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கிடங்கிலிருந்து லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

அதன்படி, மதுரை மாவட்டம் விரதனூர் அரசு டாஸ்மாக் கடைக்கு கொண்டு செல்லும் பாட்டில்களின் மூடிகளில் உள்ள சீல்கள் பிரிந்து மதுபாட்டில்களில் மதுவில் தண்ணீர் கலந்தது தெரியவந்தது.

இது குறித்து அளிக்‍கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் பகுதியை சேர்ந்த அஜய், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த ஆனந்த், சதிஷ்குமார், டேவிட்துரை ஆகியோர் லாரிகளில் இருந்து சரக்‍குகளை இறக்கும் போது, மதுபாட்டில்களின் சீலை உடைத்து சட்டவிரோதமாக மதுவில் தண்ணீர் கலந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நூதன முறையில் மதுவை திருடி விற்பனை செய்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00