தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கால் 30% மட்டுமே வியாபாரம் - உணவக உரிமையாளர்கள் வேதனை

Jan 23 2022 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 30 சதவீதம் மட்டுமே தங்களுக்‍கு வியாபாரம் நடப்பதாக உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மட்டும் செயல்பட அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஜெயா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தனியார் உணவக மேலாளர் முத்துகிருஷ்ணன், மக்கள் போக்குவரத்து இல்லாததால், உணவகங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இரவு 10 மணிக்கு வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கிவிட்டு தங்களால் வீடு திரும்ப முடியவில்லை என்றும், காவல்துறையினர் பிடித்து அபராதம் போடுவதாகவும் உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் ஒரு மணி நேரம் கூடுதலாக தளர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00