தமிழர்களை மட்டுமல்லாமல், இந்திய தேசத்தில் உள்ள அனைவரையும் ஈர்த்த பெருமைக்குரிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், பிறந்தநாளில் அவரின் நினைவை போற்றுவோம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா புகழாரம்

Jan 23 2022 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்னையும், தமிழர்களையும் மட்டுமல்லாமல், இந்திய தேசத்தில் உள்ள அனைவரையும் ஈர்த்த பெருமைக்குரிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளில், அவரின் நினைவை போற்றுவோம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும், இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நேதாஜி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல், சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது- நேதாஜி, ஹிட்லரை நேரில் சந்தித்து உரையாடியபோது, இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம் என்று ஹிட்லர் தெரிவித்த வேளையில், "தனக்கு யாரும் அரசியல் சொல்லித் தர தேவையில்லை" என்று ஹிட்லரிடம் நேருக்கு நேராக தெரிவித்த நெஞ்சுரம் படைத்தவராக இருந்துள்ளதை, நேதாஜியின் வரலாறு எடுத்துரைக்கிறது - இது நமக்கெல்லாம் அவருடைய துணிச்சலை வியந்து பார்க்க வைப்பதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும் "இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், அதில் பெண்களுக்கென தனிப்பிரிவான ஜான்சிராணி படையை தொடங்கிய சிறப்புக்குரியவராகவும் நேதாஜியை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் துணிச்சலான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, எண்ணற்ற இளம் தலைமுறையினர், அவருடைய வழியைப் பின்பற்றி, இந்திய விடுதலைக்காக போராடியுள்ளதாகவும் சின்னம்மா தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில், நேதாஜியின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பதும், இந்நன்னாளில் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணையும், தமிழர்களை மட்டுமல்லாமல் நம் இந்திய தேசத்தில் உள்ள அனைவரையும் ஈர்த்த பெருமைக்குரிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளில், அவர்தம் நினைவைப் போற்றுவோம் என்றும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00