சேலத்தில் புல்லட்டை ஓட்டிப் பார்ப்பதாக கூறி எஸ்கேப் ஆன காதல் ஜோடி : சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை

Jan 23 2022 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலத்தில், திரைப்பட பாணியில் இருசக்கர வாகனத்துடன் தப்பியோடிய காதல் ஜோடியை, போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில், ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான, இருசக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு சென்ற 2 இளம் காதல் ஜோடியினர், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை தேர்வு செய்துள்ளனர். பின்னர், வண்டியை ஓட்டி பார்ப்பதாக கூறி, வாகனத்தில் ஒரு காதல் ஜோடியினர் சென்றுவிட்டனர். நீண்ட நேரமாகியும் அந்த ஜோடி திரும்பாததால், அங்கிருந்த மற்றொரு காதல் ஜோடியிடம், ஊழியர்கள் விசாரித்துள்ளனர். ஆனால், அவர்கள் யார் என்றே தங்களுக்கு தெரியாது என்றும், தாங்கள் தனியாக வந்துள்ளதாகவும் அந்த ஜோடியினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தேகமடைந்த ஊழியர்கள், அந்த ஜோடியை, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் தங்களுக்கு தெரியும் என்று, பிடிபட்ட ஜோடி தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவின்குமார் என்பதும், வண்டியில் சென்ற பெண் அவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திரைப்பட பாணியில் நடந்த இந்த மோசடி, சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00