தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி - கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்

Jan 23 2022 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், இன்று முகூர்த்த நாள் என்பதால், மதுரை திருப்பரங்குன்றம் கோயில் வாசலில், எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன.

முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த, வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இதனால், திருப்பரங்குன்றம் கோயில் வாசலில், எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சியில், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தபடி, மணமக்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.

இதேபோல், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் முன், எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன. ஒரு சிலர், தங்கள் வீடுகளிலேயே எளிமையாக திருமணங்களை நடத்தினர். இதில் கலந்து கொண்ட உறவினர்கள், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து, மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00