புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் - தமிழகம் முழுவதிலும் தொண்டர்கள் மலர் அஞ்சலி

Dec 5 2021 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, வேலூர் மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூர் மேற்கு பகுதிச் செயலாளர் திரு.வி.பி.எம்.குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ஏ.எஸ். ராஜா தலைமையில் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், மொடக்குறிச்சியில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் திரு.ராமசாமி, மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில், மாண்புமிகு அம்மாவின் நினைவுதினத்தையொட்டி, அ.ம.மு.க. சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுச்சேரியில், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகே, வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.டி.சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் திரு.யூசி. ஆறுமுகம் தலைமையில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

மாண்புமிகு அம்மா நினைவு தினத்தையொட்டி, கரூர் மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மலர்தூவி அஞ்சலி​செலுத்தினர். கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள மாவட்டக்‍ கழக அலுவலகத்தில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.பி.எஸ்.என். தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி மாவட்ட அமமுக சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி திருவானைக்காவல் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அம்மா திருவுருவப்படத்திற்கு கழகப் பொருளாளர் திரு.ஆர்.மனோகரன் தலைமையில், கழகத்தினர், திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளர்கள் திரு.எம்.ராஜசேகரன், திரு.கே.வி.டி கலைச்செல்வன், அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி மாநில இணைச் செயலாளர்கள் திரு.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திரு.டோல்கேட் கதிரவன், எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் திரு.குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நினைவு தினத்தையொட்டி உணவு வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00