போலியாக இறப்புச் சான்றிதழ் மூலம் ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு : காரைக்கால் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு

Oct 19 2021 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

காரைக்காலில் உயிருடன் இருப்பவரை, இறந்துவிட்டதாக கூறி 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த தாய்மாமன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெடுங்காடு அன்னவாசல் சாலையை சேர்ந்த குமாரஆனந்த் என்பவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் விளைநிலத்தை தாய்மாமன் தேவராஜ் என்பவரிடம், சாகுபடி செய்ய வழங்கியுள்ளார். இதனிடையே, சில ஆண்டுகளாக தேவராஜிக்கும், குமார்ஆனந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் நிலத்தை சரியாக பராமரிக்க வில்லை எனவும் தெரிகிறது. இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நிலத்தின் உரிமையாளர் குமார் ஆனந்த் இறந்து விட்டதாக கூறி போலியாக இறப்புச் சான்றிதழ் தயார் செய்தும், போலி உயில் தயார் செய்தும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை நெடுங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் ஜெயா ஆகியோர் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த நிலத்தின் உரிமையாளர் குமார்ஆனந்த் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார், போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து, பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நெடுங்காடு பகுதியை சேர்ந்த தேவராஜ், பாஸ்கர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த காரைக்கால் சார்பதிவாளர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00