பண்டோரா ஆவணங்கள் விவகாரம் தொடர்பாக முதற்கட்ட புலன் விசாரணை தொடங்கியது

Oct 19 2021 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான, பண்டோரா ஆவணங்கள் விவகாரம் தொடர்பாக, முதற்கட்ட புலன் விசாரணை தொடங்கியுள்ளது.

2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்மையில் பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த பட்டியலில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவலில், திரைப்பட நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், DLF நிறுவன தலைவர் கே.பி. சிங், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, அமலாக்கத்துறை, நிதி நுண்ணரிவு பிரிவு, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த வாரம் முதல்முறையாக ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00