எரிபொருள் விலையேற்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை எதிரொலி - வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் உயர்வு

Oct 19 2021 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

எரிபொருள் விலையேற்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த 2 வாரங்களாக பல மாநிலங்களில் வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே செல்வதாகவும், தீபாவளி நெருங்குவதாலும், காய்கறிகளின் விலை உயருமே தவிர, குறையாது என்றும், வெளி மாநிலங்களிலிருந்து வரும் உருளைக்‍கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் விலை, மழை காரணமாக வரத்து பாதிக்கப்பட்டு, தேவை அதிகரிப்பதால் உயர்ந்தே இருக்கும் என்றும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த காய்கறிச் சந்தைகளிலேயே காய்கறிகளின் விலை 15 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ஒரு கிலோ தக்காளி 90 முதல் 93 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஒரு கிலோ கத்தரிக்‍காய் 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயராமல் உள்ளதாகவும், காரணம் அங்கு நல்ல விளைச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00