மதுரையில் ஆளும் கட்சி அராஜகம் மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டதாக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புகார் - மிரட்டல் விடுத்து இணைப்புகளை பறிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Oct 19 2021 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் ஆளும் கட்சி அராஜகம் மீண்டும் தலைதூக்க தொடங்கி இருப்பதாகவும், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை மிரட்டி இணைப்புகளை பறிக்க முயற்சி செய்வதாகவும் பாதிக்‍கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்ட கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்‍கப்பட்டுள்ளது. அதில், மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்ககூடிய சுரேஷ், ராம்குமார், மருது ஆகியோர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை ஏமாற்றி போலியான ஆவணங்களை ஆன்லைனில் பதிவுசெய்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நகரப் பகுதிகளில் உள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை மிரட்டி கேபிள் இணைப்புகளை அபகரிக்க முயல்வதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்‍குமாறும் கோரியுள்ளனர்.

கேபிள் ஆப்ரேட்டர்களை தொழில் செய்ய விடாமல் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்‍கு தொழில் பாதுகாப்பு அளிக்‍க ​வேண்டும் என்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00