தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஆற்றில் குளிக்க வேண்டாமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் - தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்‍குச் செல்ல வேண்டுகோள்

Oct 19 2021 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்‍கும் மக்‍கள், பாதுகாப்பான இடங்களுக்‍குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை காரணமாக முக்‍கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு, குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, சுவாமி சிலைகள் மேட்டு மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் யாரும் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கச் செல்லவோ வேண்டாமென்றும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்‍குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00