குரும்பூர் கூட்டுறவு வேளாண் வங்கியில், நகை கடன் வழங்கியதில் 3 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது அம்பலம் - தொடர்ந்து வரும் புகார்களால், 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம்

Sep 22 2021 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கூட்டுறவு வேளாண் வங்கியில், நகை கடன் வழங்கியதில் 3 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் புகார்களால், 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குரும்பூர் தொடக்க வேளாண்மை வங்கியில், நகை கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கி லாக்கரில் இருக்க வேண்டிய 548 நகை பைகளில் 261 பைகள் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், 3 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கியின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன், வங்கி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மோசடி செய்துவிட்டு, போலியாக டெபாசிட் பாண்ட் அளித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருவதால், 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக, தனி விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00