கூடலூரில், கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் - வனத்துறை அலுவலகம் முன்பு இறந்த மாட்டின் உடலை வைத்து ஆர்ப்பாட்டம்

Sep 22 2021 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கூடலூரில், கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து, இறந்த மாட்டை, வனத்துறை அலுவலகம் முன் வைத்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளாக புலி ஒன்று, நூற்றுக்கணக்கான மாடுகளை வேட்டையாடி கொன்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த வாரம், ஸ்ரீமதுரை பகுதியில் 4 வளர்ப்பு மாடுகளை, புலி அடித்து கொன்றது. கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இன்றும் ஒரு மாட்டை, அந்த புலி, வேட்டையாடி கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இறந்த மாட்டை, கூடலூர் வன அலுவலகம் முன் வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன் ஜெயசீலனும் கலந்து கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00