திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள் - மீண்டும் மறு நடவு செய்து காப்பாற்றி வரும் விவசாயி

Sep 10 2021 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட தென்னை மரங்களை விவசாயி ஒருவர் மீண்டும் மறு நடவு செய்து காப்பாற்றி வருகிறார் அது பற்றிய ஒரு தொகுப்பு.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த எடப்பாடி அரசின் ஆட்சியின் போது தமிழக அரசும், மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனமும் இணைந்து உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியில்ஈடுபட்டன. இந்த திட்டம் கோவை,திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விளைநிலங்கள் வழியாக மின் வயர்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்ல மின் கோபுரங்கள் அமைக்கும் போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அகற்றப்பட்டன. 30 வருடங்களுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதற்கு விவசாயிகள் வேதனையுடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சுல்தான் பேட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி வள்ளி கனகராஜ் திருப்பூர்,கோவை மாவட்டங்களில் தென்னை மரங்களை காப்பாற்ற புதிய யுக்தியைக் கையாண்டு வருகிறார். ஜேசிபி, புல்டோசர் மூலம் தனது பண்ணையில் இருந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி வேறு ஒரு இடத்தில் மறுநடவு செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் பெற்றார்.

முதலில் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் 5 முதல் 10 அடி ஆழம் வரை தோண்டி தென்னை மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் மறு நடவு செய்யப்படுகிறது. மறு நடவு செய்யும் பொழுது அந்த இடத்தில் மரத்திற்கு தேவையான உரங்கள் இடப்படுகிறது. பின்னர் 30 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அளிக்கப்படுகிறது. இது போன்று மறு நடவுகள் செய்யப்படும் தென்னை மரம் 6 மாதங்களிலேயே மீண்டும் காய்க்க தொடங்கி விடுகிறது.

ஒரு தென்னை மரத்தை மறு நடவு செய்ய ரூபாய் 4 ஆயிரம் செலவாகிறது. வாவிபாளையம் பகுதிகளில் இதுவரை 1200 தென்னை மரங்கள் மறு நடவு செய்யப்பட்டுள்ளது. மின் கோபுரம் அமைக்கும் பணியால் ஏற்கனவே தென்னை மரங்களை இழந்த விவசாயிகள் இழப்பீடாக மரத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் வரை வழங்க கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மறுநடவு மூலம் மேலும் மரங்களை வெட்டப்படாமல் காப்பாற்றப்படுவதால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00