சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

Jul 24 2021 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில், கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பொது கூட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், 30க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டன. இதனை அடுத்து மத ரீதியாக சர்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை, திருமங்கலம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00