அரியலூர் மாவட்டத்தில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது - பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது

Jul 24 2021 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது.

ஜெயங்கொண்டத்தை அடுத்த குழவடையான் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முதலை ஒன்று பகல் முழுவதும் குளத்தில் தங்கிவிட்டு, இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றி வந்தது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரமுடியாமல் அச்சமடைந்தனர். மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் அந்த முதலை இரையாக்கி வந்ததது. இதனையடுத்து, அந்த முதலையை பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்திய போதிலும் முதலை பிடிபடவில்லை. இந்நிலையில், இளைஞர்கள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் இணைந்து ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த நிலையில், விளைநிலத்தில் இருந்த முதலை பிடிபட்டது. இதனை அடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட முதலை பத்திரமாக கொள்ளிடத்தில் விடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00