நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Jul 24 2021 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், உதகை மற்றும் கூடலூர் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் 14 புள்ளி 5 சென்டி மீட்டர் மழையும், பந்தலூர் பகுதியில் 12 புள்ளி 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. உதகையை அடுத்த பாலாட ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மலை காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானது.

அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து, முக்குருத்தி, இத்தலாரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அவலாஞ்சி வன பகுதியில் ஓடும் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே புதிதாக சிறு சிறு அருவிகள் மற்றும் ஓடைகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக அவலாஞ்சி, எமரால்டு அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் காலை முதல் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. சீரமைக்கப்பட்ட போதிலும், பலத்த காற்று மற்றும் மழையால் மின்சாரம் மீண்டும் மீண்டும் துண்டிக்கப்படுகிறது. ஒரு சில கிராமங்களில் 24 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இன்றி மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். கனமழை, மின்சாரம் இன்மை, கடும் குளிர் என அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00