திமுக கொடி கட்டிய கார்களில் போதைப்பொருள் கடத்தல் - கார்களை விரட்டிப் பிடித்து 350 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார்

Jul 24 2021 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே இருவேறு இடங்களில், திமுக கொடி கட்டிய கார்களில், ஹெராயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபர்களை, போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்ததுடன், 350 கிலோ ஹெராயின் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளை, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, கும்பல் ஒன்று விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சிட்லபாக்கத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, ஹெராயின் வினியோகம் செய்த நபரை போலீசார் பிடிக்‍க முயற்சித்தனர். அப்போது, அந்த நபர் திமுக கொடி கட்டிய ஒரு சொகுசு காரில், அவரது கூட்டாளியுடன் தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பின்னால் விரட்டிச் சென்று, அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

இதனிடையே, வேளச்சேரி சாலை வழியாக திமுக கொடி கட்டிய சொகுசு காரில், ஹெராயின்​போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரை, போலீசார் பின்தொடர்ந்து பிடித்தனர். இதில், கடத்தல் நபரின் கார், சாலையோர சுவற்றில் மோதி நின்றதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். இந்த இருவேறு கார்களில் இருந்து 350 கிலோ தடை செய்யபட்ட ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00