கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை - சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியது

Jul 24 2021 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கன மழையால், சோலையார் அணை, அதன் முழு கொள்ளளவான 163 அடியை எட்டியது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு அணைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேல்நீராறு மற்றும் கீழ்நீராறு அணைகளிலில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயரத் தொடங்கியது. சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடிக்கு உயர்ந்ததால், உபரி நீர் சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு, விநாடிக்கு 867 கன அடி திறந்து விடப்பட்டது. நேற்றிரவு நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, விநாடிக்கு 6 ஆயிரத்து 725 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு ஆயிரத்து 692 கன அடியாகவும் இருந்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு சிதம்பரம் அண்ணாமலைநகர், கிள்ளை, பரங்கிப்பேட்டை, B.முட்லூர், புதுச்சத்திரம், துணிசிரமேடு, பெருங்காலூர், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

நாமக்கல் மாவட்டம் போதமலையின் அடிவாரத்தில் இருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அருவி வடுகம், அதன் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் பெருக்‍கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, போதமலைப்பகுதியில் குளிக்‍க, வனத்துறை சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00