கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் மீண்டும் திறப்பு - பக்தர்கள் தங்க அனுமதி

Jul 23 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள யாத்ரி நிவாசில் இன்று முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்திற்கு ஆன்மீக சுற்றுலாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக மறைந்த மாண்புமிகு அம்மாவால் கடந்த 2014-ம் ஆண்டு 47 புள்ளி 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யாத்ரி நிவாஸ் தொடங்கப்பட்டது. இதனிடையே யாத்ரி நிவாசில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முகாமாக செயல்பட்டது. தற்போது கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் யாத்ரி நிவாசில் பக்தர்கள் தங்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார் சுந்தர் பட்டர் தலைமையில் தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டு, யாத்ரி நிவாசில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். இங்கு தங்குவதற்கு Srirangam.org என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் தங்குவதற்கான வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00