குமரி, கோவை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Jul 23 2021 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்பட மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதே போன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய நீர்ப்பகுதிகளான நடுமலை ஆற்றிலும், கூழாங்கல் மற்றும் வாழைதோட்டம் ஆறுகளிலும் அதிகளவில் நீர்வரத்து உள்ளது. அதே சமயம் அக்காமலை, சின்னகல்லார் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 165அடி கொள்ளளவு கொண்ட அனையின் நீர்மட்டம் 159 அடியாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00