தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கு - ஆறு வாரங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jun 18 2021 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறப்பு டிஜிபி மீதான புலன் விசாரணையை முடித்து, ஆறு வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபி காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கையை பெற முடியவில்லை எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் அறிக்கை மூன்று வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால், புலன்விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஆறு வார அவகாசம் வழங்க வேண்டும் என விசாரணை அதிகாரி முத்தரசி கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து, 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமனறத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00