நாகையில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து - மின் தளவாட பொருட்கள், முக்கிய கோப்புகள் எரிந்து சேதம்

Jun 18 2021 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகையில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மின் தளவாட பொருட்கள் மற்றும் முக்கிய கோப்புகள் எரிந்து சேதமடைந்தன.

நாகை வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள உதவி மின் பொறியாளர் கட்டடம் பழுதடைந்ததால், அண்மையில் அருகிலுள்ள சூர்யா நகருக்கு அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பூட்டிக்கிடந்த உதவி மின் பொறியாளர் அலுவலகம் தீப்பிடித்து, புகைமூட்டம் வருவதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தால் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இருந்த மின் தளவாட பொருட்கள் மற்றும் முக்கிய கோப்புகள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வெளிப்பாளையம் போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00