தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு

May 15 2021 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி தமிழக அரசு புதிய உத்தரவை பிற்பித்துள்ளது.

மளிகைக் கடைகள், காய்கறி, பழக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட நண்பகல் 12 மணி வரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இந்த நேரம் குறைக்கப்பட்டு, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளிலேயே அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, திருமணம், மருத்துவ சிகிச்சை மற்றும் துக்க நிகழ்வுகளுக்காக, மாவட்டங்களுக்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய வரும் 17-ம் தேதி முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், ஏ.டி.எம்.கள், பெட்ரோல் பங்குகள், ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00