தமிழகம் முழுவதும் ஊரடங்கையொட்டி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு - ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு

May 15 2021 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையின்றி பொதுவெளியில் சுற்றித்திரிவோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிப்பதுடன், அபராதமும் விதித்தனர். மேலும் ஊரடங்கு காலத்தில் அரசு நிர்ணயித்துள்ள நேரங்களை மீறி, திறந்திருக்கும் வணிக நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதே போன்று, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியே சுற்றித்திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் இரட்டைமண்டபம் தேரடி மற்றும் காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை தலைமையில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்தவித காரணமும் இன்றி ர் மற்றும் இருச்சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த நபர்களை பிடித்து எச்சரித்ததுடன், வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00