அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச 'நீட்' பயிற்சி - வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவு

Apr 22 2021 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, இலவச 'நீட்' பயிற்சியை வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், 7 புள்ளி 5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதனால், பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் சேர உள்ள மாணவர்களுக்கு, இலவச நீட் பயிற்சி, அரசு சார்பில், ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற இருந்ததால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி, இரண்டு வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, பொது தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டது. இதனால், வரும், 25ம் தேதி முதல், மீண்டும் இலவச நீட் பயிற்சியை தொடங்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00