அ.தி.மு.க.விற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய நாடார் கூட்டமைப்பினருக்கு, தி.மு.கவினர் கொலை மிரட்டல் - கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார்
Apr 8 2021 10:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில், அ.தி.மு.க.விற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய நாடார் கூட்டமைப்பினருக்கு, தி.மு.கவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் நாடார் கூட்டமைப்பினர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்காக பணியாற்றினார்கள். இதனால் ஆத்திரமடைந்த கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. கழக செயலாளர் கணேசன் உள்ளிட்ட சிலர், நாடார் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் தி.மு.க.வினர் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.