தமிழக சட்டப்பேரவைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - மாநிலம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்‍கப்பட்டு கண்காணிப்பு

Apr 8 2021 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு சீல் வைக்‍கப்பட்டு, துணை ராணுவத்தினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நேற்று முன்தினம் நடைபெற்றன. இதில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சீல் வைக்கப்பட்டு, போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்‍கப்பட்டு, அறைகளுக்கு சீலிடப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரிகல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், துணை ராணுவத்தினர் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்புடன், 24 மணி நேரமும் சிசிடிவியில் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00