தமிழகத்தில் 4,000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு : ஒரேநாளில் 3 ஆயிரத்து 986 பேருக்கு தொற்று - 17 பேர் பலி
Apr 8 2021 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்குகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்து பதிவான நிலையில், 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரேநாளில் 3 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 7-வது நாளாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரேநாளில் ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரத்து 824 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.