விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
Apr 7 2021 8:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ஸ்ரீவித்யா கல்லூரியில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டப்பட்டன. இங்கு 109 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 541 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.