திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சாலையில் விளையாடிய சிறுவர்களிடம் சிக்கிய வெடிபொருள்
Apr 7 2021 8:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் வெடிபொருள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி எதிரில் இன்று அப்பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கிரிக்கெட் மட்டையை தரையில் தட்டியபோது ஏதோ இரும்பு பொருளில் கிரிக்கெட் மட்டை தட்டுப்பட்டுள்ளது. அப்போது அந்த இரும்பு பொருள் ராக்கெட் போல் இருந்துள்ளது. இதையறிந்த சிறுவர்கள் அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர். உடனே அவர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரில் போட்டு பயன்படுத்தக்கூடிய வெடி பொருள் என தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.