சென்னையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு
Mar 9 2021 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதியில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி, துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டையில் 9 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி, அடையாறு துணை ஆணையர் திரு.விக்ரமன் தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் தொடங்கி, கிழக்கு ஜோன்ஸ் சாலை வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல், பூக்கடை, டி.பி.சத்திரம் பகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.