சட்டப்பேரவைத் தேர்தல் செலவினங்களைக்‍ கண்காணிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

Mar 9 2021 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் செலவினங்களைக்‍ கண்காணிப்பது குறித்து, உயர் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் செலவினங்களைக்‍ கண்காணிப்பது குறித்த ஆலோசனைக்‍ கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மது மகாஜன், பாலகிருஷ்ணன், ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், வருமான வரித்துறை, சுங்கத்துறை, வணிகவரித் துறை, துணை ராணுவப் படை, காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்‍கும் அதிகமாக ரொக்கப்பணம் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வாரியாக வாகன சோதனைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்‍கப்பட்டது. G-Pay, Phone-Pay போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும் விவாதிக்‍கப்பட்டது. வேட்பாளர் ஒருவர், தேர்தல் செலவுக்காக அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைக்‍ கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00