சின்னம்மா நலம் பெற வேண்டி தொடர் வழிபாடு - செங்கல்பட்டு, தஞ்சை, திண்டுக்கல், கிருஷ்ணகிரியில் பல்வேறு கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்

Jan 25 2021 9:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

தியாகத்தலைவி சின்னம்மா, பூரண உடல்நலம் பெற்று, நீண்ட ஆயுளுடன், சிறப்பாக வாழ வேண்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் குன்றத்தூர் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பரணிபுத்தூர் சீனிவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் திரு. ம. கரிகாலன், குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.P.முத்தையா, பரணிபுத்தூர் ஊராட்சி செயலாளர் திரு. N.ரூபன், ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளர் திரு. A.N. லட்சுமிபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறைமலை நகரில் உள்ள சிவா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மறைமலை நகர செயலாளர் திரு.L.ரவிக்குமார், நகர மகளிர் அணி செயலாளர் திருமதி. புவனேஸ்வரி நாச்சியார் உள்ளிட்ட கழகத்தினர் பங்கேற்றனர்.

சின்னம்மாவின் குல தெய்வமான தஞ்சாவூர் அடுத்த விளாரில் உள்ள வீரனார் கோவிலில் தஞ்சை மாநகர இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் திரு.PTR. ராஜமூர்த்தி , விளார் திரு.பிரபு , விளார் திரு.வினோத், வடக்குப்பட்டு சீனு, ராஜாராமன் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர் .இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் லோகநாதன் தலைமையில் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சாத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் திரு.காசிமாயன், துணைச் செயலாளர் திரு.கர்ணன், மகளிர் அணிச் செயலாளர் திருமதி. கலையரசி, மாவட்ட மீனவரணி செயலாளர் திரு.கனிக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம், கிருஷ்ணகிரி நகர கழகம் சார்பில் டான்சியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திரு. அறிவழகன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு.சாபுதீன், மாவட்ட அவைத் தலைவர் திரு. ராமமூர்த்தி கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.மாதையன் கிருஷ்ணகிரி நகர செயலாளர் திரு.பாலாஜி உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00