நாளை நடைபெறுவதாக இருந்த கிராம சபைக் கூட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

Jan 25 2021 7:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுவதாக இருந்த கிராம சபைக் கூட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். கொரனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்களை தமிழக அரசு ஏற்கனவே ரத்து செய்திருந்தது. இந்நிலையில், நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களும் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், கிராம சபைக்கூட்டம் நடத்துவது ஆளும்கட்சி விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதாலேயே கிராம சபைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00