ஜனநாயகத்தின் வழிநின்று தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்‍களுக்‍கும் நன்மை தரும் மாற்றங்களை நிகழ்த்துவோம் - குடியரசு தினத்தையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து

Jan 25 2021 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைவரது உரிமைகளையும், சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாத்து, யாரையும் காயப்படுத்தாமல், ஒற்றுமையோடு வாழ்வதற்கான உறுதியை எடுத்துக்‍கொள்வோம், என குடியரசு தினத்தையொட்டி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சிறப்புகள் நிறைந்த இந்திய தேசத்தின் குடிமக்‍கள் அனைவருக்‍கும் அன்பான குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்‍கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மக்‍களாட்சி நடக்‍கிற மிகப்பெரிய நாடு என்கிற பெருமையை நமக்‍கு தந்திருப்பது ஜனநாயகம் தான் - புவியியல் அமைப்பு, மொழி, இனம், மதம், சாதி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால், குடியரசுதான் இந்தியராக நம்மை ஒன்றிணைக்கிறது - 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தனித்துவமான கட்டமைப்பில் நாம் இருந்தாலும், எந்தப் பேதமும் பார்க்காமல் இந்நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய அவசியத்தை நம் அரசியலமைப்பு முறைதான் காப்பாற்றி வருகிறது - மக்களை, மக்களே ஆளும் இத்தகைய ஜனநாயகத்திற்காகவே உலகம் நம்மை மதித்து கொண்டாடுகிறது - எனவே, ஜனநாயகத்திற்கு தீங்கு எதுவும் நேராமல் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

எல்லோருடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணி பாதுகாத்து, யாரையும் காயப்படுத்தாமல், ஒற்றுமையோடு வாழ்வதற்கான உறுதியை இந்த குடியரசு நாளில் அனைவரும் எடுத்துக் கொள்வோம் - நம்முடைய மிகப்பெரிய பலமான ஜனநாயகத்தைக் கொண்டு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவோம் - அதே ஜனநாயகத்தின் வழி நின்று தமிழ்நாட்டிலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை தருகிற மாற்றங்களை நிகழ்த்துவோம் என கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இதயம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00