திருவாரூர், நன்னிலத்தில் மிதிவண்டியில் சென்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி
Jan 25 2021 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, மிதிவண்டியில் சென்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
எட்டியலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த காத்தான் என்ற முதியவர், மிதிவண்டியில் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காக்கா கொட்டூர் பகுதிக்கு அவர் வந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கிச் சென்ற கார், நிலைதடுமாறி முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை ஓட்டிச்சென்ற கடுவங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.