பொதிகையில் சமஸ்கிருத செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு - தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

Jan 18 2021 7:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

பொதிகை தொலைக்காட்சியில், கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல், தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஒளிபரப்பப்படுமென, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழகத்தில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல என்றும், இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும், அவரது மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம், அல்லது வேறு சேனலை மாற்றிக்கொள்ளலாம் எனக் கண்டனம் தெரிவித்தனர். இதனை விட பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், தேவையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து மனுதாரர் நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00