புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் : அ.ம.மு.க. சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை

Jan 17 2021 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொ‌ட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது திருவுருவச் சி‌லைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றிய கழகம் சார்பில், கிருஷ்ணாபுரம் பகுதியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மடத்துக்குளம் ஒன்றிய கழக செயலாளர் திரு. ராஜ்குமார் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தென் சென்னை கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில், செம்மஞ்சேரி வட்டக் கழக செயலாளர்கள் திரு. B. குணசேகரன், திரு. ராஜா எபினேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் ஆலந்தூர் பகுதி அமமுக செயலாளர் திரு. A. N. லட்சுமிபதி தலைமையில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட துணைச் செயலாளர் திரு. C. வேம்பரசன், மாணவரணி இணைச் செயலாளர் திரு. K. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு. தங்க மாரியப்பன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு எட்வின் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சோட்டையன் தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் மேற்கு ஒன்றிய அமமுக செயலாளர் திரு. இசக்கிமுத்து உள்ளிட்ட கழகத்தினர் மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் திரு. எஸ். காமராஜ் வழிகாட்டுதலின்படி, திருவாரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில், அவரது திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நகர கழக துணைச்செயலாளர் திரு. ஹஜி, மாவட்ட பிரதிநிதி திரு. பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர கழகம் சார்பில், எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகர அமமுக செயலாளர் திரு. ஏ.கே சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், நகர கழகம் மற்றும் அரிமளம் ஒன்றியக் கழகம் சார்பில், அரிமளம் கடைவீதியில் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர் திரு. எம்.பி. நடேசன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் திரு. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம், மருத்துவ அணி சார்பாக,ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் திரு. ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஆரல்வாய்மொழி பேரூர் கழக செயலாளர் திரு. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00