வாடகைக்‍கு இருந்தவர்களை வெளியேற்ற வீட்டையே இடித்து தள்ளிய தி.மு.க. பிரமுகர் - இடிபாடுகளில் சிக்‍கி சிறுவன் படுகாயம்

Nov 28 2020 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் வீட்டு வாடகை தராத ஆத்திரத்தில், தி.மு.க உறுப்பினரான வீட்டு உரிமையாளர், வீடு இடித்து தள்ளிவிட்டு தலைமறைவாகியுள்ளார். வீட்டிலிருந்த சிறுவன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

மதுரை மண்மலைமேடு பர்மா காலனியில், திரு.பாரதிராஜா - விஜயலட்சுமி தம்பதியர், தங்கள் மகன் மற்றும் மகளுடன் கடந்த 10 ஆண்டுகளாக, சபரிராயன் என்பவரது வீட்டில் வாடகைக்‍கு வசித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், பாரதிராஜா வேலையிழந்து நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த 5 மாதங்களாக வாடகை செலுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். எனினும், வாடகை கேட்டு திருமதி விஜயலட்சுமிக்‍கு தொல்லை கொடுத்து வந்த சபரிராயன், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தனது ஆதரவாளர்களை அழைத்து வந்த சபரிராயன், சிறுவன் விக்‍னேஸ்வரன் வீட்டில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த வீட்டையே இடித்து தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள சபரிராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00