தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 28 2020 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக, வரும் ஒன்றாம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால், மாலத்தீவு வழங்கிய புரெவி என்ற பெயர் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.