மாமல்லபுரத்ததை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - விவரங்களை தெரிவிக்காவிட்டால் மத்திய மாநில அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை

Nov 27 2020 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாமல்லபுரத்ததை அழகுபடுத்த எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்பதை தெரிவிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய-மாநில செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு, மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஆய்வுசெய்ய, சுற்றுலாத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர், தொல்லியல்துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. ஆய்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாமல்லபுரம் உள்பட 16 சுற்றுலாதலங்களை மேம்படுத்த ஐந்தாயிரத்து 109 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்திற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, மத்திய அரசு தரப்பில் உரிய பதில் அளிக்காததால், மாமல்லபுரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இல்லையெனில், சம்பந்தப்பட்ட மத்திய-மாநிலச் செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரித்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00