வங்கிக்‍கடன் செலுத்த முடியாதவர்களிடம் வட்டிக்‍கு வட்டி வசூலிப்பது நியாயம்தானா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி - பெரிய கடன் பெற்ற தொழிலதிபர்கள் தப்பிச் செல்வதாகவும், சிறு கடன்கள் வாங்கிய ஏழைகளே துன்புறுத்தப்படுவதாகவும் வேதனை

Nov 27 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கிக்‍கடன் செலுத்த முடியாதவர்களிடம் வட்டிக்‍கு வட்டி வசூலிப்பது நியாயமற்றது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 1000 கோடிகளில் கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும், சிறு கடன்கள் வாங்கிய ஏழைகளே துன்புறுத்தப்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வங்கி கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததைத் திரும்பப் பெறக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்‍கில் இன்று விசாரணை நடைபெற்றது. பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது எனக்‍ கருத்து தெரிவித்த நீதிபதிகள், எந்த விதிகளின் அடிப்படையில், வங்கிகள், கடன் தொகை வசூலிப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 1000 கோடிக்கு மேல் கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும், சிறு கடன்கள் வாங்கிய ஏழைகளே துன்புறுத்தப்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இந்த வழக்‍கின் விசாரணை வரும் 1-ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00