சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது

Nov 19 2020 8:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி வாகனத்தை வடிவமைத்துள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் வானவில் நகரைச் சேர்ந்த உமாசங்கர்- சங்கீதா தம்பதியரின் மகளான செல்வி. வினிஷா, தனியார் பன்னாட்டு பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயது முதலே அறிவியலில் நாட்டம் உடைய வினிஷா, அது தொடர்பான புத்தகங்களை விரும்பி படித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தனது வீட்டின் அருகில் இஸ்திரி செய்பவர் கரித்துண்டுகளை குப்பையில் கொட்டுவதை பார்த்த மாணவி வினிஷா, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை வடிவமைத்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முயன்று இதனை வினிஷா உருவாக்கியுள்ளார். வாகனத்துடன் இணைந்துள்ள பேட்டரியை சார்ஜ் செய்தால் 6 மணி வரை தொடர்ந்து துணியை இஸ்திரி செய்ய முடியும். மாணவியின் இந்த கண்டுபிடிப்புக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00