சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஐஏஎஸ் பணியிடம் மறுப்பு - மத்திய அரசுக்கு நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

Oct 21 2020 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஐஏஎஸ் பணியிடம் மறுக்கப்பட்டுள்ளதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் எம்.பூரணசுந்தரி என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி கடந்த 2019-ல் 4-வது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இவருக்கு இந்திய வருவாய்ப் பணி- வருமான வரி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூரண சுந்தரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி, தனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஓபிசி பிரிவில் தன்னை விடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளதாக பூரணசுந்தரி கூறியிருந்தார். இந்த மனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது 2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிட்டுள்ள பட்டியல், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்குத் தீர்ப்பாயம் ஒத்தி வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00