ஈரோடு அருகே கடன் தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி - கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிய கும்பல்

Oct 21 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு அருகே, கடன் தருவதாகக் கூறி, 1 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவானவர்கள் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்த விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அடுத்த காலிங்கராயன்பாளையத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவதாகக் கூறிய தனியார் நிறுவனத்தினர், தங்களது கிளையை கடந்த மாதம் தொடங்கியுள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பிரசுரங்கள் மூலம், இந்த நிறுவனத்தினர் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டதோடு, உள்ளூரைச் சேர்ந்த 9 பெண்கள் உட்பட 26 பேரை பணிக்கும் அமர்த்தினர். ஆவணங்களுக்கான செலவு என 16 ஆயிரம் ரூபாயை கடன் கேட்டு வந்தவர்களிடம் வசூலித்துள்ளனர்.

ஆனால், யாருக்கும் கடன் தராமல் நேற்று முன்தினம் இரவு அந்நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர். நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கும் ஊதியம் தரவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, புகார் அளித்தனர். நேற்று முன்தினம் மட்டும், 45 லட்சம் ரூபாய் வசூலானதாகவும், மொத்தம் 1 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00