மருத்துவ படிப்பு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - தமிழக ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Oct 20 2020 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ படிப்புக்கான உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவ உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு இன்று ட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட அக்‍கட்சியின் அரசியல் தலைமைக்‍ குழு உறுப்பினர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், மருத்துவ உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என குற்றம் சாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ஜி.ராமகிருஷ்ணன், தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இடஒதுக்‍கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தினால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை பாதுகாக்க 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்திடவும் வலியுறுத்தி, திருச்சியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக பங்கேற்று அரசுக்‍கு எதிராக கோஷமிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00