பாசன ஆற்றில் கலக்‍கும், பாதாள சாக்கடை கழிவுநீர் - திருவாரூரில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நீராதாரம், விவசாயம் பாதிப்பு

Oct 17 2020 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாசன ஆற்றில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதால், நூற்றுக்கணக்கான கிராமங்களின் நீராதாரமும், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயமும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் மட்டுமின்றி, நாகை மாவட்ட கிராமங்களுக்கும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும் ஆதாரமாக இருந்து வந்தது, சுக்கானாறு. ஆக்கிரமிப்பாலும், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும் பாழ்பட்ட இந்த ஆற்றிலிருந்து, ஆயில் இன்ஜின் மூலம் விவசாயிகள் நீரை இரைத்து, விளைநிலங்களுக்கு பயன்படுத்தி, ஒருபோக சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், திருவாரூர் நகராட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தால், ஒருபோக சாகுபடியும் கேள்விக்குறியானது. சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுதுறையின் வழிகாட்டு நெறிமுறைகளை கொஞ்சம்கூட கடைபிடிக்காமல், கழிவுநீரை, நகராட்சி நிர்வாகம், சுக்கானாற்றில் திறந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

சுக்கானாறு பாயும் பகுதி முழுவதும் ஒருவித தூர்நாற்றம் வீசுவதுடன், தண்ணீர் முழுவதுமாக மாசுபட்டு விட்டது. வெள்ளைபோர்வை போர்த்தியதைபோன்று நுரையுடன் ஆறு முழுவதும் பரவிய கழிவுநீரால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரால் ஏற்படும் தூர்நாற்றத்தை போக்க, ரசாயன வேதிப்பொருட்களையும் சேர்த்து விடும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், ஆற்று நீரை பயன்படுத்தும் கிராம மக்கள், பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கந்துவட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்து வந்த விவசாயிகள், ஆற்றில் கலக்கும் ரசாயன பாதாள சாக்கடை கழிவுநீரால், நெற்பயிர்கள் எரிந்து மகசூல் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சுக்கானாற்றில் திறந்துவிடப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருவதாக, கிராமமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, தோல்நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

பாதாள சாக்கடை கழிவுநீர், சுக்கானாற்றில் கலப்பதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இல்லாவிடில் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை முதலானவற்றை அரசிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00