துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்தி அம்மாவின் மக்‍கள் நல கொள்கைகளை வாழ வைப்பதே வெற்றிவேலுக்‍கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி - தொண்டர்களுக்‍கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

Oct 16 2020 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
அளவிட முடியாத இயக்கப்பற்று மற்றும் அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் திரு. வெற்றிவேல் என, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்தி, மாண்புமிகு அம்மாவின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைப்பதே திரு. வெற்றிவேலுக்கு, நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கழகத் தொண்டர்களுக்‍கு இன்று எழுதியுள்ள மடலில், துணிச்சலின் இருப்பிடமாகவும், தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த, கழகத்தின் பொருளாளரும், தனது அருமை நண்பருமான திரு. வெற்றிவேல், நம்மை எல்லாம் கலங்கவைத்து சென்றுவிட்ட பெருந்துயரத்தோடு இந்த மடலை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார். நண்பர் வெற்றி இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் தனது மனம் நம்ப மறுப்பதாக திரு.டிடிவி தினகரன் உருக்‍கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன் மதிப்புக்குரிய ஐயா ஜி.கே.மூப்பனாரால் அறிமுகமான திரு. வெற்றிவேலுக்கும், தனக்‍குமான நட்பு, நம்மோடு அவர் இணைந்து பயணிக்கத் தொடங்கிய பிறகு இன்னும் நெருக்கமானது - ஐயா மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மாவிடம் வெற்றிவேலை அறிமுகப்படுத்தி வைத்த அந்த மணித்துளிகள் இப்போதும் தனது மனதில் பசுமையாக இருக்கின்றன - அதன்பின்னர் அம்மாவின் பேரன்புக்கு பாத்திரமானவராக திரு. வெற்றிவேல் திகழ்ந்தார் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மா போட்டியிட ஏதுவாக 2015ல் தமது எம்.எல்.ஏ பதவியைத் துறந்தார் - அந்தத்தொகுதியில் அம்மா வாகை சூடுவதற்கு உழைத்த தொண்டர் படையின் தளகர்த்தராக நின்று எந்த மனத்தயக்கமும் இல்லாமல் வெற்றி பணியாற்றினார் - அதுதான் வெற்றிவேல் எனும் விசுவாசத்தின் போற்றுதலுக்குரிய குணம் - ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, தலைமைக்காக எத்தனை துயர் வந்தாலும் இம்மியளவும் பிசகாமல் விசுவாசத்தின் இமயமாக நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்வதே ஒரு லட்சியவாதியின் அடையாளம் - அப்படியோர் அசைக்கமுடியாத அடையாளமாக நம் கண்ணெதிரே திகழ்ந்தவர் திரு.வெற்றிவேல் என, திரு.டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். ஆமாம்… திரு.வெற்றிவேல் என்றால் விசுவாசம் - விசுவாசம் என்றால் வெற்றிவேல் - அம்மா மறைவுக்குப் பிறகு அதே மாறாத அன்பையும் அளவிட முடியாத பாசத்தையும் தியாகத்தலைவி சின்னம்மா மீதும், தன் மீதும் காட்டினார் என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

அதுவரை தமிழக வரலாறு பார்த்திராத அளவுக்கு அதிகாரத்தின் அத்தனை முனைகளின் வழியாகவும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை எல்லாம் தாண்டி 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு முழுமுதற்காரணமே தன் அருமை நண்பர் வெற்றிதான் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள் நிறைந்த அந்த இடைத்தேர்தல் களத்தில் சூறாவளியாக சுற்றிச் சுழன்று வெற்றி ஆற்றிய பணிகளை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது - அதன்பிறகு தாம் மறையும் வரை தன்னுடைய பிரதிநிதியாக நின்று ஆர்.கே.நகரில் மக்கள் பணிகளை மேற்கொண்டவரும் அவர்தான் என திரு. டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிவேல் நினைத்திருந்தால் 'அற்ற குளத்து அறுநீர்ப்பறவை போல' ஆதாயம் இருக்குமிடம் தேடி பறந்திருக்கலாம் - ஆனால் 'தனிப்பட்ட பலன்களைவிட, இயக்கமே பெரிது' என்றெண்ணி இறுதிவரை ஏற்றுக்கொண்ட தலைமைக்கு பக்கபலமாக வேலாகவும், வாளாகவும் களத்தில் நின்றார் - சூதுமதியாளர்களின் துரோகத்தால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோன போதும் அதைப்பற்றி கவலைப்படாமல், முன்பைவிட இன்னும் வேகமாக இயக்கப் பணியாற்றியவர் - எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் 'நான் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பேன்' என்று நெஞ்சம் நிமிர்த்தி சொன்ன பெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர் திரு. வெற்றிவேல் என திரு.டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்குப் பிறகு எத்தர்களும், உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த துரோகிகளும் தியாகத்தலைவி சின்னம்மாவின் மீது சுமத்திய அபாண்ட பழி துடைத்தெறியப்பட்டதில் வெற்றிவேலின் பங்கு முக்கியமானது - அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சிகளை அவர் வெளியிட்டதில் தனக்கே கூட உடன்பாடு இல்லை என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 'ஏன் இப்படி செய்தீர்கள்?' என்று கேட்டபோது, 'தோழியாக, தாயாக அம்மாவைப் பார்த்துக்கொண்ட சின்னம்மா மீது மனசாட்சியை விற்று தின்றவர்கள் திட்டமிட்டு பரப்பிய அவதூறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; அதனால்தான் வீடியோவை வெளியிட்டேன்' என்று பதில் சொன்னார் என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார். அந்த உண்மை வெளியானதும் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்த பிறகே, வெற்றிவேல் எனும் அப்பழுக்கில்லாத தளபதியின் ஆதங்கத்தில் இருந்த நியாயம் புரிந்தது - இப்படி இயக்கத்திற்காக, தலைமைக்காக சுயமாக முடிவெடுத்து சமரசங்கள் ஏதுமில்லாமல் செயல்படும் தீரமும், நெஞ்சுரமும் கொண்டவர் திரு.வெற்றிவேல் என திரு.டிடிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் எதிரிகளும் துரோகிகளும் ஏற்படுத்துகிற இத்தகைய தடைகளை எல்லாம் உடைத்து தூள், தூளாக்கி வெற்றி பெறும் சக்தியை வெற்றி போன்றவர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள் - அந்த உணர்வு மாறாமல், லட்சியப்பாதையில் இன்னும் பிடிப்போடும், வேகத்தோடும் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுவதே வெற்றிவேலுக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அறிஞர் பெருந்தகை அண்ணாவின் இயக்கத்தை சுயநலமே உருவாகக்கொண்ட தீயசக்தி கூட்டம் ஆக்கிரமித்தபோது அவர்களிடம் இருந்து அண்ணாவின் உண்மைத்தொண்டர்களையும், தமிழ்நாட்டையும் காத்திட நம்முடைய புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கண்ட 49வது ஆண்டு தொடங்கும் இந்த நேரத்தில், அதற்கான உறுதியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

பொன்மனச்செம்மலின் மறைவுக்குப் பின்னர், தமிழகத்திற்கு தீங்கிழைத்த தீயசக்தியாம் தி.மு.க. கூட்டத்தை, தலைவர் காட்டிய பாதையில் துளியும் வழுவாமல் நின்று, இறுதிவரை எதிர்த்து வீழ்த்தியவர் நம் அம்மா அவர்கள் - அம்மா மறைந்தவுடன் நம் தியாகத்தலைவி சின்னம்மா, தன்னுடைய நலனைப் பற்றி சிந்திக்காமல் இரும்புப்பெண்மணியாக நின்று, அம்மாவின் ஆட்சியையும், கட்சியையும் ஒருசேர காப்பாற்றினார்கள் - ஆனால், பதவி வந்ததும் அனைத்தையும் மறந்த துரோக மனிதர்களின் உண்மை சொரூபம் வெளிப்பட்டதாக திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

உலகம் போற்றும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதோடு, மக்கள் விரோத திட்டங்களைத் தடுத்து நிறுத்தி, ஒரு தாய் தன் பிள்ளைகளை காப்பதுபோல அன்புத்தாயாக இருந்து தமிழகத்தைக் காத்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா - ஆனால் இந்த துரோக கூட்டத்தினர், மக்களைக் காக்கவே அதிகாரம் என்பதை மறந்து அம்மா அவர்கள் தடுத்து நிறுத்திவைத்திருந்த அத்தனை மக்கள் விரோத திட்டங்களையும் தங்கள் சுயநலனுக்காக நிறைவேற்றி தமிழக மக்களுக்கும் பச்சையாக துரோகமிழைத்தார்கள் என திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இத்தகைய துரோகத்தைக் கண்டு உள்ளம் குமுறிய இதயதெய்வம் அம்மாவின் தூய தொண்டர்களான திரு.வெற்றிவேல் போன்றவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இயக்கமே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் - நம்மை இயக்கும் சக்தியாக திகழும் நம் அன்புத்தாயின் பெயரைக்கொண்டு, அவரின் கம்பீர உருவத்தை கொடியிலும் இதயத்திலும் தாங்கி நாம் லட்சியப் பயணத்தைத் தொடங்கினோம் என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாரம் தரும் சுகத்திற்காக மட்டுமே ஒன்றிணைந்திருப்பவர்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த அதிகாரம் தீர்ந்ததும் என்ன செய்வார்கள் என்பது உலகறிந்ததே! - ஆளுமைமிக்க தலைமை இல்லாமல், இப்போதே தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்களாக மாறி, அவர்களுக்குள்ளேயே குழி பறித்துக் கொண்டிருக்கிறார்கள் - புரட்சித்தலைவர் உருவாக்கி, புரட்சித்தலைவி கட்டி காத்த இயக்கத்தையும் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள் - எனவே, அம்மாவின் கொள்கைகளை வாழ வைக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காத்திடவும் இவர்களை வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் தமிழகத்திற்கு விரோதமான திட்டங்களை உருவாக்கிய தீயசக்தியான தி.மு.க, இப்போது அதே திட்டங்களை எதிர்க்கிறோம் என்கிறது - வன்முறையைச் சாமானிய மக்கள் மீது ஏவுபவர்கள், மக்களைக் காக்க வருகிறோம் என்கிறார்கள் - திரைக்கதை, வசனம் எழுதி செயற்கையாக போராட்டம் நடத்தி, மக்களுக்காக போராடுகிறோம் என நாடகமாடுகிறார்கள் - அதிகாரம் தரும் பலன்கள் தீர்ந்ததும் துரோக கூட்டம் உதிர்ந்து போகும். அப்போது புரட்சித்தலைவி அம்மாவின் உண்மையான பிள்ளைகளாக வருகிற சட்டமன்றத் தேர்தல் களத்தில் நின்று நாம்தான் தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி மக்களின் அன்பைப் பெறுகிற அந்த இடத்தை நோக்கி நாம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம் - ஏனெனில், எதற்கும் அஞ்சாத லட்சோப லட்சம் வெற்றிவேல்கள் கட்டி எழுப்பிய பேரியக்கம் இது - திரு. வெற்றிவேல் போன்ற தன்னலமில்லாத தளபதிகளால் போற்றி பாதுகாக்கப்படுகிற இயக்கம் இது - அதனால் நாம் நிச்சயம் வெற்றிக்கோட்டையை எட்டிப்பிடிப்போம் - ஏனெனில் நம்முடைய திரு.வெற்றிவேல் போன்றோரின் தியாகமும், உழைப்பும் ஒரு நாளும் வீண் போகாது என திரு. டிடிவி தினகரன, தொண்டர்களுக்‍கு எழுதியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00